sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாக்டர் ஆக எழுதுங்கள் நீட்

டாக்டர் ஆக எழுதுங்கள் நீட்

டாக்டர் ஆக எழுதுங்கள் நீட்


UPDATED : பிப் 24, 2024 12:00 AM

ADDED : பிப் 24, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2024 12:00 AM ADDED : பிப் 24, 2024 09:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மத்திய கல்வி அமைச்சகத்தின் அனுமதியுடன் செயல்படும் தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ., இத்தேர்வை கடந்த 2019ம் ஆண்டு முதல் நடத்துகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் - யு.ஜி., தேர்வும், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு நீட் - பி.ஜி., தேர்வும் எழுத வேண்டும். நீட்- யு.ஜி., தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் தற்போது விண்ணப்பிக்கலாம்.படிப்புகள்:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., மற்றும் பி.எச்.எம்.எஸ்.,தேர்வு முறை:
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பிரிவு ‘ஏ’வில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். பிரிவு ‘பி’ல் கேட்கப்படும் 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு மட்டும் விடை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவ்வாறு, பாடத்திற்கு தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். கேள்விகள் அனைத்தும் ’மல்டிபில் சாய்ஸ்’ வடிவிலேயே இடம்பெறும்.கேள்வித் தாள்கள்:
ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமீஸ், பெங்காலி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி ஆகிய மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். தேர்வு நேரம்:
பிற்பகல் 2 - 5:20 மணிவரை. மொத்தம் 200 நிமிடங்கள்.விண்ணப்பிக்கும் முறை:
https://neet.ntaonline.in/frontend/web/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
மார்ச் 9தேர்வு நடைபெறும் நாள்:
மே 5விபரங்களுக்கு:
https://exams.nta.ac.in/NEET#

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us