sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உண்டு உறைவிட பள்ளிகள் துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

உண்டு உறைவிட பள்ளிகள் துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

உண்டு உறைவிட பள்ளிகள் துவக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : பிப் 24, 2024 12:00 AM

ADDED : பிப் 24, 2024 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2024 12:00 AM ADDED : பிப் 24, 2024 05:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக ஊரகப் பகுதிகளில், பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட, உண்டு உறைவிடப் பள்ளி அமைப்பது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறைக்கும், சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மகேஷ், பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன், சிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் சுந்தர், பானர்ஜி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.இதன்படி, சென்னையில் சிவ் நாடார் அறக்கட்டளை சார்பில், உண்டு உறைவிடப்பள்ளி நிறுவப்பட உள்ளது. இதில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மாணவ - மாணவியர் பெறுவர். இதில், மாணவியருக்கு, 50 சதவீதம் வாய்ப்பு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us