UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 09:13 AM
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், புத்தக கண்காட்சி கடந்த, 24ம் தேதி துவங்கியது. வரும், மார்ச் 4 வரை, 10 நாட்கள் இந்த புத்தக கண்காட்சி நடக்கிறது.இங்கு, 110 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.இங்கு விற்பனையாகும் புத்தகங்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சியில் தினமும் காலை முதல் மாலை வரை, பல்வேறு அரசு பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.மாலையில், பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றம், சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் முதல் நாளான, 24ல், திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம், நேற்று முன்தினம், கவிஞர் கவிதாசன், வெய்யில், மற்றும் புகபாரதி ஆகியோர் பேசினர். கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் மற்றும் ராமலிங்கம் சிறப்பு பேச்சும் நடந்தது.