UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 09:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பள்ளி மாணவர்கள் புல்வெளியில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.சமீபமாக பள்ளி மாணவர்களின் படிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் சுற்றுலாவை ஊக்குவிக்கின்றனர். அந்த வகையில் மாவட்டந்தோறும் ஏராளமான மாணவர்கள் கொடைக்கானலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலை, பிரையன்ட் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் மாணவர்கள் துள்ளி குதித்து உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இங்குள்ள பூக்களையும் கண்டு ரசித்தனர்.