எங்களுக்கு பஸ் தான் வேண்டும்! முதல்வருக்கு மாணவி கடிதம்
எங்களுக்கு பஸ் தான் வேண்டும்! முதல்வருக்கு மாணவி கடிதம்
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 11:56 AM
பெங்களூரு:
எங்களுக்கு கோவில் பிரசாதம் தேவையில்லை. நாங்கள் உயர் கல்வி பெற, பஸ் வசதி செய்து கொடுங்கள் என மாணவி ஒருவர், மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து, பெங்களூரு புறநகரின், சீகேஹள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி ஹர்ஷினி, முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதம்:
நான், ஸ்ரீநகர் அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். சீகேஹள்ளியில் இருந்து, மாகடி சாலை வழியாக, ஸ்ரீநகர் பஸ் நிலையத்துக்கு செல்ல, பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். இது குறித்து, நானும், என் தாயும் பலமுறை கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை,வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில், சுமனஹள்ளியில் இருந்து, கடபகெரே வழியாக ராயர காமதேனு கோவிலுக்கு மணிக்கு ஒரு பஸ் வீதம் இயக்குகின்றனர். எங்களுக்கு கோவிலின் பிரசாதம் தேவையில்லை; உயர் கல்வி பெற பஸ்களை இயக்குங்கள்.இன்றைய நாட்களில் பெண்களுக்கு உயர் கல்வி, பாதுகாப்பு கிடைக்கும்படி செய்திருப்பது அம்பேத்கர். அவரது பெயரில் மாவட்ட, தாலுகா, கிராமங்களின் சிறார்களுக்கு சிறப்பு பஸ்கள் துவக்கும்படி, வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.