பலத்த பாதுகாப்புடன் போலீஸ் தேர்வு 3,000 பேரில் 1,392 பேர் ஆப்சென்ட்
பலத்த பாதுகாப்புடன் போலீஸ் தேர்வு 3,000 பேரில் 1,392 பேர் ஆப்சென்ட்
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 11:57 AM
தங்கவயல்:
போலீஸ் ஏட்டு, மகளிர் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு தங்கவயலில் இரண்டு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. 3,000 பேரில் 1,392 பேர் ஆப்சென்ட் ஆயினர்.ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லுாரி, உரிகம் முதல் நிலைக் கல்லூரி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்த ஆண்கள் ஷூ அணியவும், பெண்கள் தாலியை தவிர, வேறு நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.*நான்கு மாத கை குழந்தையுடன் தேர்வு எழுத பிஜாப்பூரில் இருந்து பாக்யலட்சுமி என்ற பெண், தனது குழந்தை, தாயுடன் வந்திருந்தார். குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுதினார். அதுவரை தாய், அங்கிருந்த அறையில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.*உரிகம் கல்லுாரி தேர்வு மையத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்த நபரை அனுமதிக்க வில்லை. கெஞ்சி பார்த்தும் அனுமதிக்காமல் தடுக்கப்பட்டார். மிகுந்த கட்டுப்பாட்டுடன் தேர்வு நடந்தது.*தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 3,000. இதில் தேர்வு எழுதியவர்கள் 1,608.