UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 11:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற்று, 600க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில் ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், இரண்டாவது செமஸ்டர் தேர்வை, மார்ச் 28ல் துவங்குமாறு, இயக்குனரகம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் 19க்குள் தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்கும்படியும், புதிய கல்வி ஆண்டில், ஜூன் 10 முதல் மீண்டும் வகுப்புகளை துவங்குமாறும், அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.