ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 05:08 PM
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இன்று (பிப்.,28) நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.தூத்துக்குடி 3வது வடக்கு நிலக்கரி தளத்தை இயந்திர மயமாக்கும் பணியை ரூ. 265.15 கோடி மதிப்பில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் தினமும் 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ரூ.124.32 கோடியிலும், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் பணிகள் ரூ.4586 கோடியிலும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத்தலமாக்கும் பணிகளையும் மோடி துவக்கி வைத்தார்.ராக்கெட் ஏவுதளம்
குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி, தி.மு.க.,எம்.பி கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செங்கோல் பரிசு
விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

