புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை: டாடா இன்ஸ்டிடியூட் சாதனை
புற்றுநோயை குணப்படுத்த ரூ.100க்கு மாத்திரை: டாடா இன்ஸ்டிடியூட் சாதனை
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 05:09 PM
மும்பை:
இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில், ரூ.100 விலையில் மாத்திரையை, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து உள்ளது.டாடா இன்ஸ்டிடியூட் அறிக்கை:
இந்த ஆராய்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த, நிறுவனம் தற்போது வெற்றி கண்டுள்ளது. இந்த மாத்திரை நோயாளிகளுக்கு இரண்டாவது முறை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் எனவும், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் எனவும் டாடா நிறுவனம் தெரிவித்து உள்ளது. கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றிலும் இந்த மாத்திரை பயன் உள்ளதாக இருக்கும்.இந்த மாத்திரை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் ஒப்புதலுக்கு பிறகு விற்பனைக்கு வரும்.மாத்திரை தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த மாத்திரை பெரிதும் உதவும். எல்லா மருந்துக்கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும். இது பெரிய வெற்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

