ஒட்டன்சத்திரத்தில் தேர்வு மையம் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஒட்டன்சத்திரத்தில் தேர்வு மையம் ஸ்டாலின் திறந்து வைத்தார்
UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:16 AM
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் கருணாநிதி நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையம், கள்ளிமந்தையம் அரண்மனை வலசு பிரிவில் அரசு கலை அறிவியல் கல்லுாரி கட்டடம், ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குளிர்பதன கோடவுன் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உடன் இருந்தார்.ஒட்டன்த்திரத்தில் கலெக்டர் பூங்கொடி,எம்.பி., வேலுச்சாமி, திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சசி, ஒன்றிய தலைவர்கள் சத்தியபுவனா, அய்யம்மாள், துணைத் தலைவர்கள் பி.சி.தங்கம், காயத்ரிதேவி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ் , மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, தாஹிரா, கிருஷ்ணன், காமராஜ், ஒன்றிய பொறியாளர் விஜயராகவன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், ஊராட்சித் தலைவர்கள் அமுதாகாமையன், முருகானந்தம், துணைத்தலைவர்கள் கவுரி, பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, கண்மணிகருணாதேவி, ஊராட்சி செயலர்கள் மகுடீஸ்வரன், மணிகண்டன் கலந்து கொண்டனர்.

