UPDATED : பிப் 29, 2024 12:00 AM
ADDED : பிப் 29, 2024 09:16 AM
தேனி:
மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்யும் பொருட்களை இ.எஸ்.எம்.எஸ்., செயலில் பதிவேற்ற குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் பணிபுரியும் அலுவலர்கள், வாக்குச்சாவடி மையங்கள் உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டு விட்டன. தேர்தல் தேதி அறிவித்தவுடன், பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் 4 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 13 பறக்கும் படையில் 39 பேர், கூடுதலாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை, பொருட்களை பறிமுதல் செய்தால் இ.எஸ்.எம்.எஸ்., செயலில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

