UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள்சமவேலைக்கு சம ஊதியம் வேண்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தாத்தப்பன், மாவட்ட பொருளாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் 24 ஆண்கள் உள்ளிட்ட 74 ஆசிரியர்களை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

