UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 09:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் குழந்தைகள் பிரிவு துவக்க விழா நடந்தது.செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். நூலக நன்கொடையாளர் ஆனந்தநாயகி மைதிலி குத்து விளக்கேற்றினார். கலெக்டர் ஜெயசீலன் நூலகத்தில் குழந்தைகள் பிரிவினை திறந்து வைத்து பேசினார்.விழாவில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், புலவர் பாலகிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் கலசலிங்கம், சந்திரன், முத்துப்பட்டர், ராதா சங்கர், நூலக அலுவலர்கள் பங்கேற்றனர். துணைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

