துவங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு: 7.72 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
துவங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு: 7.72 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 01:35 PM
சென்னை:
தமிழகம், புதுச்சேரியில் இன்று (மார்ச் 1) பிளஸ் 2 பொது தேர்வு, துவங்கியது. இதற்காக மாநிலம் முழுதும், 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,534 பள்ளிகளை சேர்ந்த, 7.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். 43,200 ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.விதிமீறல்கள், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, 3,200 பேர் அடங்கிய பறக்கும் படைகளும், 1,135 நிலையான கண்காணிப்பு படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு பணிகளில் விதிமீறலை தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என, 39 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், அரசு தேர்வுத் துறை இயக்குனரகத்தில், 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

