UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 05:04 PM
சென்னை:
தமிழகத்தின் அரியலுார் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சர்வாணிகா, ஏற்கனவே தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.இவர், மலேஷியாவில் ஒருவாரமாக நடந்த காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வானார். அவரால் அங்கு செல்ல வசதி இல்லாததால், அமைச்சர் உதயநிதியிடம் உதவி கோரினார். அவருக்கு, தமிழக சாம்பியன்ஸ் பவுண்டேசன் சார்பில், 1.78 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இந்நிலையில், 10 வயதுக்குட்பட்டோருக்கான முக்கிய போட்டிகளின் ஒன்பது சுற்றுகளில் விளையாடி, எட்டு புள்ளிகளுடன் சர்வாணிகா வெற்றி பெற்றார். அடுத்து நடந்த அதிவிரைவு போட்டியில், 11 சுற்றுகளில் விளையாடி 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.இதன் வாயிலாக இவர் இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். அவரை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி வாழ்த்தினார்.

