UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 05:05 PM
சென்னை:
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கிய மூன்று விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வார் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதை ஊக்குவித்து, பிற இயற்கை விவசாயிகளுக்கு கைகொடுப்போருக்கு, தமிழக அரசு சார்பில், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது.அதன்படி, நம்மாழ்வார் விருதுடன், முதல் மூன்று பரிசுத் தொகைகளைப் பெற, மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர்.*தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தருக்கு, முதல் பரிசாக 2.50 லட்சம் ரூபாய்; 10,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்பட்டது*திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமிக்கு, இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் ரூபாய்; 7,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம்; காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலனுக்கு, மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய்; 5,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்பட்டன.இதை, தலைமை செயலகத்தில்,முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

