UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 07:11 PM
ஒவ்வொருவரும் வித்தியாசமாகக் கற்றுக்கொள்கிறார்கள், வித்தியாசமாகப் புரிந்துகொள்கிறார்கள் மற்றும் வித்தியாசமாக செயல்படுகிறார்கள். அனைவருக்கும் ஏற்ற வகையில் பாடங்களை புரிய வைப்பதும், கற்றல் இடைவெளியை குறைப்பதும் 'அடாப்டிவ் லேர்னிங்’ எனப்படுகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களின் பலவீனங்களைக் கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய மாணவர்களுக்கு உதவுகிறார்கள்.இந்த ஆற்றல்மிக்க கல்வித் துறையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் புதிய கற்றல் அணுகுமுறைகளை கையாள வேண்டும். மாணவர்களின் அவரவரின் தனிப்பட்ட வேகத்தில் கற்றலை ஊக்குவிக்கும் சூழ்நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்கள் சிறப்பாக கற்க உதவும் வகையில் தழுவல் கற்றலைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,), மெஷின் லேர்ன்ங் (எம்.எல்.,) அல்லது கம்ப்யூட் அல்காரிதம் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அடாப்டிவ் லேர்னிங்-ல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த அணுகுமுறை ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள், திறன்கள் மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் கற்றல் முறைகளை மாற்றியமைக்கிறது. இதில் ஒவ்வொரு மாணவர் பற்றிய தரவுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதனால் அவர்களின் கற்றலில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்படுகிறது. அடாப்டிவ் லேர்னிங் சந்தையானது 2030ம் ஆண்டளவில் 15.4 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பம்
தேர்ந்தெடுக்கப்படும் தொழில்நுட்பம் கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான சிறந்த வாய்ப்பைத் தருகிறது. அடாப்டிவ் லேர்னிங்-ல் பீட்பேக் என்பது முக்கியப் பகுதி. இது மாணவர்களின் கருத்துக்களையும், அவர்கள் கற்றல் அனுபவத்தையும் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள முடிகிறது. மற்ற துறைகள் போலவே கல்வியிலும் அனுபவம் முக்கியமனது. எனவே அடாப்டிவ் லேர்னிங் வழக்கமான கல்வி முறையிலிருந்து வேறுபட்டது. இதில் தொழில்நுட்பத்தின் பங்கு இன்றியமையாதது. சரியான மென்பொருள், இணையதளம், ஆகியவற்றை கவனமுடன் தேர்ந்தெடுத்தல் அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு மாணவரின் தரவுகளும் சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பாடத்திட்டங்கள், கற்பிக்கும் வழிமுறைகள், செய்முறை படங்கள், எடுத்துக்காட்டுகள் என அனைத்தும் தனிப்பட்ட வலைதளங்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. அதனால் தரவு பாதுகாப்பு முக்கியமானது. ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடியாத அளவுக்கு தரவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பு மற்றும் திருத்தத்திற்கான டிஜிட்டல் பாடத்திட்ட புத்தகங்கள் மற்றும் வகுப்பு குறிப்புகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஆய்வக அமர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு தொடர்புடைய பாடங்களுக்கான நடைமுறை வீடியோக்களும் இதில் இருக்கும்.தெளிவான கற்றல்
அடாப்டிவ் லேர்னிங் செயல்முறையின் மூலம் மாணவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் வரையறுக்க வேண்டும். இதில் மாணவர்களின் திறமை, கற்றல் திறன் மற்றும் ஈடுபாட்டை அதிகரிப்பது குறித்த தரவுகளை சேகரிக்கிறார்கள். பல கல்வித் தொழில்நுட்பத் தளங்கள் அடாப்டிவ் கற்றல் அம்சங்களை வழங்குகின்றன. தங்களுக்கு குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ற தளத்தை ஆராய்ந்து, மதிப்பீடு செய்து, தேர்ந்தெடுக்கவும். இந்த செயல்முறைகள் மாணவர்களிடையே தெளிவான கற்றலை உருவாக்கும். மேலும் கற்றலில் உள்ள குறைபாடுகள் மெல்ல குறைந்து ஆர்வத்தை ஏற்படுத்தும். மாணவர்களிடயே காணப்படும் இந்த முன்னேற்றங்களை ஆசிரியர்கள் தரவுகளாக சேகரித்து வைப்பார்கள்.செயல்திறன்
ஆன்லைன் மூலம் விர்ச்சுவல் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்பதால் தங்களுக்கு வசதியான நேரங்களில் கற்கின்றனர். இதனால் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் அந்தப் பாடங்களில் கூடுதலாக கவனம் செலுத்தவும், புரிந்து கற்கவும் சூழ்நிலை உருவாகிறது. வகுப்புகளிலும், தேர்வுகளிலும் அவர்களுடைய செயல்திறன் வெளிப்படுகிறது. கற்றல் நேரத்தை சரியான முறையிலும், ஆக்கப்பூர்வாகமும் பயன்படுத்தப்பட்டு மாணவர்களின் திறமைகள், செயல்திறன் ஆகியவை வெளிப்படும் ஒரு சிறந்த காரணியாக அடாப்டிவ் லேர்னிங் விளங்குகிறது.

