பிளஸ் 2 தமிழ் தேர்வு: 14,904 பேர் பங்கேற்பு காயமுற்ற மாணவிக்கு அனுமதி
பிளஸ் 2 தமிழ் தேர்வு: 14,904 பேர் பங்கேற்பு காயமுற்ற மாணவிக்கு அனுமதி
UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு நேற்று தொடங்கியது.மாவட்ட அளவில் 163 பள்ளிகளை சேர்ந்த 6,800 மாணவர், 8307 மாணவிகள் என 15,107 பேர், தனித்தேர்வர்கள் 224 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தமிழ் தேர்வு நேற்று 81 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், 6686 மாணவர்களும், 8218 மாணவிகள் என 14,904 பேர் எழுதினர்.சிவகங்கை அரசு மகளிர் பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் ஆஷா அஜித் பார்வையிட்டார். இங்கு பார்வை குறைபாடுடைய 8 மாணவர்கள்ஆசிரியர்கள் துணையுடன் தேர்வு எழுதினர். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

