UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:39 AM
திருப்பூர்:
வரும், 2024 - 2025ம் கல்வியாண்டில், துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான பணிகளை உடனடியாக துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்:
ஐந்து வயது நிரம்பிய, குழந்தைகள் குறித்து, தொடக்கக்கல்வி பதிவேட்டை சரிபார்த்து, வீடுகள் தோறும் சென்று ஒன்றாம் வகுப்பில் கூடுதலாக பள்ளி மாணவர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.ஒற்றை இலக்கத்தில் மாணவர் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், இரட்டை இலக்கத்துக்கு குழந்தைகள் எண்ணிக்கை வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். துவக்கப்பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்கும் முன்பு, பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான பொறுப்புகளை குழுவாக பிரித்து வழங்க வேண்டும். ஸ்பாட் அட்மிஷன் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

