UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் செயல்பட்டு வருகிறது. திட்ட இயக்குனராக இருந்த விஜயராகவன், நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.விஜயராகவன், அதற்குமுன் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிலையங்களின் இயக்குனராக இருந்தார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்த அரிய ஓலைச்சுவடிகளை வெளிநாடுகளுக்கு விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

