UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 05:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வில், திருப்பூர் ஒன்றியம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஜனனி, விகாசினி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஏழு ஆண்டுகளாக மாணவ, மாணவிகளை தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மெர்ஷி வித்யா உள்ளிட்டோர் பாராட்டினர். தேர்வில் வென்ற மாணவிகளுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

