நோ சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்! சைபர் குற்றங்களை தவிர்க்க அறிவுரை
நோ சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்! சைபர் குற்றங்களை தவிர்க்க அறிவுரை
UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 05:04 PM
கோவை:
டிஜிட்டல் வர்த்தகத்தில் யெஸ் மட்டுமே சொல்லும் நாம் நோ சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பேசினார்.உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் சகாப்தத்தில் நுகர்வோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் நுகர்வோர் அமைப்பினர், கல்லுாரி மாணவர்கள் கருத்துகள் தெரிவித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா பேசியதாவது:
பொருட்கள் தரமாக இருக்கிறதா என்பதை சோதனை செய்து வாங்க வேண்டும். நம்மிடம் விழிப்புணர்வு உள்ளது. அதேசமயம், விதிமுறைகள் தெரிந்தாலும் அதை பின்பற்றுவதில்லை. டிஜிட்டலில் கேட்கப்படும் தகவல்கள் அனைத்துக்கு நாம் &'யெஸ்&' மட்டுமே கொடுக்கிறோம்.பிறகு ஏன் சைபர் குற்றங்கள் நடக்காது. நமக்கு தேவையில்லாத இடத்தில் நோ சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். கல்லுாரிகளில் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அதன் பிறகு விதிமுறைகள் அனைத்தும் பேசும் பொருளாகவே இருக்கிறது; கடைபிடிப்பதில்லை. தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

