UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 08:24 AM
சென்னை:
சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை மாங்காடு அருகே செயல்படும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மோப்பநாய், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கோவை
கோவை வடவள்ளி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளி முன் பெற்றோர்கள் குவிந்ததால், அப்புகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

