UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 08:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:
பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு, சுமூகமாக நடந்தது.கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கின. முதல் நாள் தேர்வு எந்தவித இடையூறும் இன்றி நடந்தது. மாநிலம் முழுதும் 1,124 தேர்வு மையங்களில், 3.3 லட்சம் மாணவர்கள், 3.6 லட்சம் மாணவியர் தேர்வு எழுதினர்.இவர்களின் வசதிக்காக, தேர்வு மையம் வரை, இலவச பஸ் வசதியை கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., செய்திருந்தன. அனைத்து மையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.தேர்வு மையங்களின் 200 மீட்டர் சுற்றுப்பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; கம்ப்யூட்டர் சென்டர்கள், ஜெராக்ஸ் கடைகள் மூடப்பட்டன. கன்னடம் மற்றும் அராபிக் மொழி தேர்வுகள் நடந்தது. மார்ச் 22 வரை தேர்வு நடக்கும்.

