திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை; கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு
திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை; கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 09:07 AM
உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், தேசிய மொழிபெயர்ப்பு திட்டம் மற்றும் திறன்வளர்ப்பு பயிற்சி பட்டறை நடந்தது.மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் சார்பில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பயிற்சி பட்டறை நடந்தது. பல்வேறு கல்லுாரிகளைச்சேர்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சி பட்டறை ஆறு நாட்கள் நடந்தது.மொழி பெயர்ப்பு கோட்பாடுகள், அதிலுள்ள சிக்கல்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. சிக்கண்ணா அரசுக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பயிற்சிகளை துவக்கி வைத்தார்.தமிழ்நாடு பாடநுால் நிறுவன இணை இயக்குனர் சரவணன், மாநில அரசின் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் குறித்து, கலந்துரையாடினார். பனாரஸ் பல்கலை., ஆங்கிலத்துறை பேராசிரியர் உமேஷ்குமார், மராத்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்வது குறித்தும், புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் அருள்செல்வன், திரைப்படத்துறையில் உள்ள மொழிபெயர்ப்பு குறித்தும் பேசினர்.உடுமலை அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் அபுபக்கர், வாசுதேவன் பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். நிறைவு விழாவில், பேராசிரியர் சிந்தாமணி தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மாற்றுவது குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் கல்யாணி, நடுவண் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.

