பழங்குடியினர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு
பழங்குடியினர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு
UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 09:10 AM
கோத்தகிரி:
கோத்தகிரி சுற்றுப்புற கிராமங்களில் பள்ளி இடைநின்ற பழங்குடியின மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோத்தகிரி அரவேனு ஜி.டி.ஆர்., அரசு பள்ளி ஆசிரியை சித்ரா. இவர், பள்ளியில் படிக்கும் சில பழங்குடி குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நின்றதை அறிந்தார். தனது விடுமுறை நாட்களில் பள்ளிக்கு உட்பட்ட, தாளமொக்கை, செம்மனாரை, கோழித்துறை உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களுக்கு சென்று, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது அவசியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.மேலும், ஹோம் பேஸ் முதல் வகுப்பு குழந்தையான முத்துலட்சுமிக்கு, மாதம் இருமுறை வீட்டிற்கு நேரில் சென்று, பாடங்களை போதித்து வருகிறார். அதன் பயனாக, அந்த குழந்தையை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் உறுதி அளித்தனர்.

