UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 09:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை அரசு கலை கல்லுாரியில், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில், ஆடை சக்தி என்ற அணிவகுப்பு நடந்தது. அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இதில், மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர். புதிய நவீன உடைகளிலும், போலீஸ், நிருபர், கலெக்டர், வக்கீல் போன்ற ஆடைகளிலும், மாணவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். மாணவி ஒருவர் விவசாயி உடையில் பங்கேற்று, நடுவர்களின் கேள்விகளை மிகவும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.லிஷியா பேஷன் நிறுவன நிர்வாகிகள் நடுவர்களாக பங்கேற்று, மாணவிகளின் தன்னம்பிக்கையை மதிப்பீடு செய்தனர். இதில், வணிக நிர்வாகவியல் அதிகாரி பிரபு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுகுணா, கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

