UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 09:06 AM
பள்ளியில் மாணவர்களுக்கான சமூக திறன்களை வளர்ப்பது அவர்களை பள்ளிகளில் நல்ல மாணவர்களாகவும், சமூகத்தில் அரோக்கியமான மனிதர்களாகவும் பிற்காலத்தில் விளங்க உதவுகிறது. குழந்தைகளை மற்றவர்களுடன் திறம்பட பழகவும், உறவுகளை உருவாக்கவும், குழுக்களாக வேலை செய்யவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும், சுயமரியாதையை வளர்க்கவும் உதவுகின்றன. இந்த திறன்களை குழந்தைகளுக்கு கற்பிப்பது அவர்களின் கல்வியின் ஒரு முக்கிய அம்சமாகும். குழந்தைகள் சமூக திறன்களை வளர்க்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.சமூக அணுகுமுறைகள்
சமூகத் திறன் நேர்மறையான கற்றலுக்கு வழிவகுக்கிறது. ஒருவரின் சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. இது பரிவு, சுய விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. சமூக-உணர்ச்சி திறன்களை வளர்ப்பது மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்றும் கல்வி ரீதியாக ஆரோக்கியமான உறவுகளை உருவாக்க உதவுகிறது. நேர்மறையான சமூக அணுகுமுறைகள் சுயமரியாதையை அதிகரிக்கும், தனிமை உணர்வைக் குறைக்கும். மேலும், மற்றவர்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்வதும், மதிப்பதும், பன்முகத்தன்மை மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களில் நேர்மறையான அணுகுமுறையை வளர்க்கிறது.சமூகத் தொடர்பு
சமூகத் தொடர்பு திறன்கள் கல்வி அமைப்புகளில் மட்டுமல்ல, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் அவசியம். வலுவான சமூக தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு திறன் கொண்ட மாணவர்கள் தங்களைத் தெளிவாக வெளிப்படுத்தக் கொள்கிறார்கள். சமூகப் பிரச்சனைகளில் தீர்வு காண்கிறார்கள். ஒரு குழுவில் பணிபுரியும் அல்லது படிக்கும் மாணவர்கள் வெவ்வேறு நபர்களுடன் தொடர்புகொள்ளும் போது அது ஒரு ஆரோக்கியமான நட்புக்குகு வழிவகுக்கிறது. மேலும் பல்வேறு குழுக்களுடன் இணைந்து நிவாரணப் பணி, கல்வி, விளையாட்டு ஆகிய பொதுப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இந்த திறன்கள் தொழில்முறை உலகிலும் அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. தன்னம்பிக்கை
சக குழுக்கள், சமூகம், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நல்ல உறவு உருவாகும் பொழுது தன்னம்பிக்கைப் பிறக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. நேர்மறையான சமூக தொடர்புகள் மற்றும் சமூக சூழ்நிலைகளை வழிநடத்தும் திறன் ஆகியவை மாணவர்களின் குணநலன்களை திறம்பட மேம்படுத்துகின்றன. நம்பிக்கை, சவால்களை எதிர்கொள்வதிலும், அபாயங்களை எதிர்கொள்வதிலும், உறுதியுடன் இலக்குகளை அடைவதிலும் இச்சமூகத் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகத் திறனில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் சவால்களை மிகவும் திறம்பட கையாளுகின்றனர்.தலைமைப் பண்பு
ஆக்கப்பூர்வமான யோசனைகளுடன் சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருவது மாணவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, அவர்களை வெற்றிக்கு சிறப்பாக நிலைநிறுத்தக்கூடிய ஒரு திறமையாகும். சமூக திறன்கள் தொடர்பு, குழுப்பணி போன்ற தலைமைத்துவ குணங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. சமூக தொடர்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் திறமையான தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களை ஊக்கப்படுத்தி பல்வேறு நிலைகளில் அவர்களை வழிநடத்துகிறார்கள். இது ஒரு நேர்மறையான மற்றும் செயல்திறன் மிக்க கற்றல் சூழலில் முக்கிய பங்காற்றுகிறது. இப்பண்பு பள்ளிகளில் மாணவர்களிடையே நடக்கும் குழு விவாதங்கள், போட்டிகளில் பிரதிபலிக்கிறது.

