UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 09:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல் அண்டு டி., மைக்ரோசாப்ட், சிஸ்கோ போன்ற தொழில்துறை நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் கல்விச் சமூகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்திற்கு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-சென்னை தலைமை தாங்குகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கு தெளிவான முக்கியத்துவத்துடன் உற்பத்தி, ஆற்றல், கணினி அறிவியல், மேலாண்மை ஆய்வுகள், உடல்நலம் மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் பல்வேறு படிப்புகளை ஸ்வயம் பிளஸ் வழங்குகிறது.2017ம் ஆண்டில் 31 லட்சமாக இருந்த 'ஸ்வயம்’ தளத்தில் சேர்க்கை பெற்ற மாணவர் எண்ணிக்கை, 2023ம் ஆண்டு இறுதியில் 72 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

