UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 09:19 AM
தேனி:
தேனி பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2ம் ஆண்டு புத்தகத் திருவிழா துவக்க விழா கோலாகலமாக நடந்தது.கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்து, புத்தக ஸ்டால்களை பார்வையிட்டார். அவர் பேசுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிறுவயதில் இருந்தே புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் புத்தகத்தை நண்பர்களாக கருத வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகம் வாங்குவதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன.அதனால் ஸ்டால்களில் மாணவர்கள் ஆர்வத்தோடு புத்தகங்கள் வாங்கினர். பழங்களால் சிலைகள் செய்யும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து ஈரோடு மகேஷ் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், ஆர்.டி.ஓ.,க்கள் முத்துமாதவன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்), மாவட்ட நுாலகர் சரவணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத் தலைவர் மணிமாறன், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

