கால்டுவெலின் திராவிட மொழி நூல் போலியானது: கவர்னர் ரவி
கால்டுவெலின் திராவிட மொழி நூல் போலியானது: கவர்னர் ரவி
UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 05:36 PM
சென்னை:
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், மகா விஷ்ணுவின் அவதாரம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொதுவானவை. திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது.ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப் படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர். எனக்கு இயேசுவும், பைபிளும் பிடிக்கும். ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது.1839ம் ஆண்டு 90 ஆயிரம் மெட்ராஸ் மாகாண மக்கள், மத மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டர் தோன்றினார். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. அய்யா வைகுண்டரின் கனவை நனவாக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

