UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:00 AM
மூளை சீராக செயல்பட்டால் அதனுடைய ஆற்றல் பிரமிக்கத்தக்கது. ஆனால் நம்மில் பெரும்பாலோருக்கு அது சீராக செயல்படுவதில்லை. ஆகவேதான் கவனக்குறைவு, படிப்பது நினைவில் நிற்பது இல்லை, படிக்கவே தோன்றுவது இல்லை அல்லது அதில் நாட்டம் இல்லை, மூளையை சீராக இயக்க மட்டும் கற்றுக் கொண்டால், ஒவ்வொருவரிலிருந்தும் ஒரு அசகாய சக்தி பிறந்து அவர்களை எதையும் சாதிக்க வைக்கும்.மூளையை ஒழுங்காக பராமரிப்பதன் மூலம் நாம் நம் மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு வழி வகுக்கலாம். தேர்வுக்கென்று நீங்கள் தயாராகும் சமயத்தில் உங்கள் மூளையை இப்போதிருந்தே நீங்கள் பராமரிப்பது அவசியம். உங்கள் உணவில் உங்கள் மூளைக்கு ஏற்ற ஊட்ட சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.தேர்வு காலத்தில் அத்தியாவசிய உணவுகள்: அன்றாடம் முளை கட்டிய தானியங்கள் ஒரு கப், கீரை வகைகள், பழச்சாறு, உலர்ந்த பழங்கள் - பாதாம், பேரிச்சை, திராட்சை, பச்சை காய்கறிகள், பழங்கள்.தவிர்க்க வேண்டிய உணவுகள்: கண் விழித்து படிப்பதற்கு, காபி, தேநீர் உதவும் என்று அதிக மாணவர்கள் குடிக்கும் விஷயம். அனால் இது இயல்பான துாக்க நிலையை கெடுப்பதுடன் துாங்கும் வேளையில் கூட மூளைக்கு தேவையான ஓய்வை தராது. இதற்கு பதிலாக சுக்கு காபி, இஞ்சி காபி போன்றவற்றை சூடாக குடிக்கலாம்.மைதா, வெள்ளை சர்க்கரை, அதிகமான இனிப்புகள், கடைகளில் விற்கப்படும் அடைக்கப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனிகளை போதியளவு தவிர்க்க வேண்டும்.அடிக்கடி தண்ணீர் அருந்தும் பழக்கத்தை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் களைப்படையாமல் எழுத, சமயோசிதமாக செயல்பட என்று அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும். இவை உடலளவில் அவசியம். அனால் இதே மூளையை, படிக்க பயன்படுத்தும் போது இன்னும் சில விஷங்களை நீங்கள் கடைபிடித்தால் அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகும்.

