UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:03 AM
நல்ல காற்றை சுவாசிப்பதற்காக, எங்கெங்கோ அலைகிறோம். அந்த காற்றை நாம் ஏன் உருவாக்க கூடாது. சின்ன சின்னச் செடிகள் வைத்தாலே போதும், உங்கள் வீட்டுக்குள் நீங்கள் ஒரு ஆக்சிஜன் பிளான்டையே உருவாக்கலாம். முதலில் ஏன் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என கேள்வி கேட்டு, நீங்களே உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு பொழுதுபோக்கிற்காகவா, தோட்டக்கலையின் மீது ஆர்வமா அல்லது ஆர்கானிக் காய்கறி முடிந்தவரை வளர்க்க விருப்பமா? இல்லை மாடியில் ஒரு பசுமையான இடம் வேண்டும் என எண்ணி கூட நீங்கள் உருவாக்க நினைக்கலாம்.அது எப்படி என்றாலும், இது உங்களுக்கு லாபமான விஷயம் தான். அதை உருவாக்குவது உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். அதற்காக பெரிய அளவில் நாம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. செடிகளை வளர்ப்பதற்கென்று விற்பனையாகும், பைகளை வாங்கி அதில் காய்கறி நாற்றுக்களை நட்டு பராமரித்தால் போதும். நம் வீட்டிற்கு ஆக்சிஜனை வரவழைத்து விட்டோம் என்று அர்த்தம்.

