பிளஸ் 1 தமிழ்பாட தேர்வு எளிமை மாணவ, மாணவியர் பேட்டி
பிளஸ் 1 தமிழ்பாட தேர்வு எளிமை மாணவ, மாணவியர் பேட்டி
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:16 AM
காஞ்சிபுரம்:
பிளஸ் 1 தமிழ்பாட தேர்வு எள்மையாகைருந்தது என மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.உள்பகுதி வினாக்கள் கடினம்
ஆர்.எம்.ஹரிணி, காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி:
தமிழ் வினாத்தாள் கடினமாக இருக்கும் என, எதிர்பார்த்தேன். ஆனால், அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. இதில், பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்த சில வினாக்கள் மட்டுமே சற்று கடினமாக இருந்தது. இருப்பினும், அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன்.மனப்பாட பகுதி கடினம்
நீ.மோனேஷ், வாலாஜாபாத் அரசு பள்ளி:
தமிழ் பாடத்தில், ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. ஐந்து மதிப்பெண் மற்றும் மனப்பாட பகுதி மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் அனைத்து வினாக்களுக்கு முழுமையாக பதில் அளித்துள்ளேன்.நெடுவினாக்கள் மிகவும் எளிமை
பி.வெண்ணிலா ,அரசு மகளிர் பள்ளி:
தமிழ் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. இதில், சில வினாக்கள் புதுமையாக இருந்தன. நெடு வினாக்கள் அனைத்தும் ஏற்கனவே நடந்த தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்களே இடம் பெற்றிருந்ததால், மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன்.ஒரு மதிப்பெண் வினா எளிமை
கே.இந்துஸ்ரீ, விக்டோரியா மெட்ரிக்., பள்ளி:
தமிழ் பாடத்தில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமின்றி அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன.இதனால், அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்து உள்ளேன். இதேபோல பிற தேர்வுகளும் எளிமையாக இருக்கும் என நம்புகிறேன்.இலக்கண வினா ஈசி
பி.திவாகர், கா.மு.சு., மேல்நிலைப்பள்ளி:
தமிழ் பாடத்தில், ஒரு மதிப்பெண், நான்கு மதிப்பெண் மற்றும் இலக்கண பாட வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. ஏற்கனவே படித்த வினாக்களே இடம் பெற்றிருந்தன.

