மாநகராட்சிக்கு சிறந்த விருது: டில்லியில் பெறுகிறார் மேயர்
மாநகராட்சிக்கு சிறந்த விருது: டில்லியில் பெறுகிறார் மேயர்
UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:16 AM
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி அவசர மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.வில்லரசம்பட்டியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் ரேஷன் கடை கட்டடம் கட்ட அனுமதி; மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒன்பது செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆட்களை நியமிப்பது என்பது உள்பட, 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்திய அளவில், அம்ருத் திட்டத்தில் கழிவு நீர் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும், 5ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில், மேயர் நாகரத்தினத்துக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளதாக கமிஷனர்கூறினார்.லோக்சபா தேர்தல் முடியும் வரை, மாநகராட்சியில் வரியினங்கள் செலுத்துவதை கட்டாயப்படுத்த வேண்டாம்; அப்படி கட்டாயப்படுத்தினால் அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

