UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
தமிழக பள்ளி கல்வித்துறை மாநில தேர்வு குழுவால், அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு, 2022-23ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான விழா திருச்சியில் நாளை நடக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கு, 10 லட்சம் ரூபாய், பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை லலிதா, ஈரோடு மாநகராட்சி எஸ்.கே.சி. ரோடு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, பெருந்துறை என்.கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி இந்த விருது பெறுகின்றனர்.

