UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 04:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தொகுதி 4 பணியிடங்களுக்கான மூன்றாம்கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தொகுதி 4 பணியிடங்களில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கான மூன்றாம்கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கல்ந்து கொள்ளவிருக்கும் தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இக்கலந்தாய்வு சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.

