UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:49 PM
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், பல்வேறு புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பு உள்பட பல்வேறு துறை படிப்புகளில், வரும் கல்வி ஆண்டில், நான்கு ஆண்டு பட்டப்படிப்புகள் துவங்கப்படுகின்றன.இந்நிலையில், மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், மூன்று ஆண்டு பட்டப்படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பு போன்றவற்றில் நடப்பு கல்வியாண்டில் படித்து கொண்டிருப்போர், புதிதாக துவங்கப்பட உள்ள, நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் சேர விரும்பினால், அவர்கள் ஏற்கனவே படித்த காலத்தை கணக்கிட்டு, அப்படியே, நான்கு ஆண்டு படிப்புக்கு மாறி கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

