UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:14 AM
மதுரை:
டில்லி உயர்நீதிமன்றத்தில் ஆவணங்கள் ஆன்லைன் முறையில் கையாளப்படுகின்றன.இப்பதிவுகளை நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர், தீ, சைபர் தாக்குதலிலிருந்து பாதுகாக்க மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டது. பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் சர்வர்கள் மூலம் பதிவுகளை மீட்பதற்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாக தேசிய தகவல் மையத்தில் (என்.ஐ.சி.,) கம்ப்யூட்டர் தகவல் பேரிடர் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சத்கர் துவக்கி வைத்தனர்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.விஜயகுமார், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, சஞ்சீவ் நரூலா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர்கள் வெங்கடவரதன் (நீதித்துறை), மீனா (நிர்வாகம்), கூடுதல் பதிவாளர் அப்துல் பாக்கர் (ஐ.டி.,) பங்கேற்றனர்.

