UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:16 AM
புழல்:
சென்னை, தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன், 22. இவர், கடந்த மாதம், அதே பகுதியில் நடந்த அடிதடி வழக்கில் கைதாகி, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை, அவரது நண்பர்களான சந்தோஷ், 19, மற்றும் 10ம் வகுப்பு மாணவர் ஆகியோர், நேற்று காலை சிறையில் சந்தித்தனர்.அப்போது, அவருக்கு பிஸ்கட், பழம் மற்றும் ஜீன்ஸ் பேன்ட், சர்ட் ஆகியவற்றை கொடுத்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சிறை போலீசார், அவர்களை பிடித்து வைத்து, அவர்கள் கைதிக்கு கொடுத்த பொருட்களை சோதனையிட்டனர்.இதில், ஜீன்ஸ் பேன்டின் ஒரு பகுதியில், 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

