UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:45 AM
திருப்பூர்:
பிளஸ் 1 தமிழ்தேர்வு கடினமாக இருந்தது; எதிர்பார்த்த வினாக்கள் இடம் பெறவில்லை. பெரும்பாலான வினாக்கள் புத்தகத்துக்குள் இருந்து வந்திருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.தமிழ் தேர்வெழுத, 25 ஆயிரத்து, 893 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 25 ஆயிரத்து, 633 பேர் எழுதினர். 249 பேர் தேர்வுக்கு வரவில்லை. 282 தனித்தேர்வர்களில், 70 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 212 பேர் தேர்வெழுதினர்.ராகுல்: இப்படி ஒரு வினாத்தாளை எதிர்பார்க்கவில்லை. ஒரு மதிப்பெண் உட்பட பெரும்பாலான வினாக்கள் புத்தகத்துக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது. பாடத்துக்கு பின்புறமுள்ள பயிற்சி வினாக்கள் குறைந்தளவே இடம் பெற்றிருந்தது. தேர்ச்சி பெற்று விடலாம். கூடுதல் மதிப்பெண் பெற முடியாது.சண்முகம்: முந்தைய வினாத்தாள், திருப்புதல் தேர்வுகளில் இருந்து வினாக்கள் வரும் என எதிர்பார்த்தேன். அவ்வாறு வினாக்கள் வரவில்லை. ஒரு மதிப்பெண் பாதிக்கு பாதி பதில் அளிக்க முடியாத படி, பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது.நவநிதா: பாடங்களுக்குள் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களையும் படித்திருந்தால், முழு மதிப்பெண் பெற முடியும். குறைந்தபட்ச வினாக்களை படித்தவர்கள், 80 சதவீத மதிப்பெண்ணை மட்டுமே பெற முடியும். படிக்காத மாணவர்கள், 50 சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண்ணை பெறுவர்.ஜனனி: பாடங்களுக்கு பின் உள்ள வினாக்களை மட்டும் படித்தவர்கள் தேர்ச்சி பெற்று விடலாம். வினாத்தாள் கடினம் என்பதால், கூடுதல் மதிப்பெண் பெற முடியாது. மாதிரி வினாத்தாளில் இருந்து எந்த விதமான கேள்விகளும் இடம் பெறவில்லை. எதிர்பார்த்த கேள்விகள் இடம்பெறாததால் ஏமாற்றமே மிஞ்சியது.மகேஷ்வரி, தமிழாசிரியர்: தமிழ் தேர்வில், 14 ஒரு மதிப்பெண், ஏழு பாடங்களுக்குள் இருந்து, மற்றவை, பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டது. சரியான விடையை சிந்தித்து அதன்பின், மாணவர்கள் விடையளிக்க வேண்டியது.இரண்டு மதிப்பெண்ணில் மூன்று, நான்கு மற்றும் ஏழு மதிப்பெண்ணில் தலா இரண்டு கேள்விகள் பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அட்டை டூ அட்டை படித்தவர்கள் சென்டம் எடுக்க முடியும்.முதல் தேர்வே சற்று கடினமாக இருந்ததால், தேர்வெழுதிய பிளஸ் 1 மாணவ, மாணவியர் கவலை அடைந்தனர். வரும், 7ம் தேதி ஆங்கிலத்தேர்வு நடக்கவுள்ளது.

