UPDATED : மார் 07, 2024 12:00 AM
ADDED : மார் 07, 2024 09:47 AM
சென்னை:
ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடிகள் குறித்த சைபர் கிரைம் ரீல்ஸ் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மார்ச் 14ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.மாநில சைபர் கிரைம் போலீஸ் பிரிவின் அறிவிப்பு:
பொது மக்கள் மற்றும் மாணவர்கள், ஆன்லைன் கடன் செயலி, ஆன்லைன் திருமண மோசடி, கூரியர் மோசடி, சமூக வலைதளத்தில் போலி சுயவிபரம், ஆள்மாறாட்டம் மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடிகள் குறித்த, ரீல்ஸ் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசு பெறலாம்.பங்கேற்பாளர்கள், கூகுள் பார்ம் வாயிலாக, ஆன்லைனில் வரும், 14ம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும். தங்களின் ரீல்ஸ்கள், 30 வினாடிக்குள் அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் இருக்க வேண்டும். கூகுள் டிரைவ்வில் பதிவேற்றம் செய்து, அதற்கான, லிங்க்கை கூகுள் பார்மில் பகிர வேண்டும்.மேலும், தகவல்களுக்கு, எங்களின் @tncybercrimeoff என்ற சமூக வலைதள பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளவும். வெற்றியாளர்கள் குறித்து, 18ம் தேதி அறிவிக்கப்படும். முதல் பரிசு, 25,000; இரண்டாம் பரிசு, 20,000; மூன்றாம் பரிசு, 15,000 ரூபாய்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

