UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 10:08 AM
சிவகாசி:
வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளம் அரசு பள்ளி மாணவி 7 உலக அதிசயங்களை முட்டையில் வரைந்து கலாம்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் பதிவு செய்தார்.வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தை சேர்ந்தவர் மாலதி 16. இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் இவர் கலாம்ஸ் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவதற்காக ஏழு உலக அதிசயங்களையும் 7 முட்டைகளில் 48 நிமிடங்களில் தத்ரூபமாக ஓவியமாக வரைந்து சாதனை புரிந்தார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினார்.மாலதி கூறுகையில், கொரோனோ காலகட்டத்தில் விடுமுறையில் வீட்டில் இருந்தபோது நானாகவே ஓவியம் வரைந்து பழகினேன். அதனைத் தொடர்ந்து ஓவியத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என விரும்பினேன்.எனவே கலாம்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் பதிவதற்காக ஏழு உலக அதிசயங்களையும் 7 முட்டைகளில் வரைய முடிவெடுத்தேன். இதற்காக எனக்கு ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான் 48 நிமிடங்களில் வரைந்து சாதனை புரிந்தேன், என்றார்.

