அதுல்யா - ஸ்ரீராமச்சந்திரா முதியோர் நலனுக்கு ஒப்பந்தம்
அதுல்யா - ஸ்ரீராமச்சந்திரா முதியோர் நலனுக்கு ஒப்பந்தம்
UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 10:09 AM
சென்னை:
அதுல்யா சீனியர் கேர் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இது குறித்து, அதுல்யா சீனியர் கேர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதுல்யா சீனியர் கேர் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் இடையே, மூத்த குடிமக்கள் நலன் பாதுகாப்பு தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வழியே, மூத்த குடிமக்களை பாதுகாக்க தேவையான, அனைத்து வகை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.இரு நிறுவனங்களும் இணைந்து, மூத்த குடிமக்களின் எதிர்காலம், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது, அவர்களை சிறந்த முறையில் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து, கல்வி மற்றும் ஆராய்ச்சி வழியாகவும், சமூக முன்னெடுப்புகள் மூலமும் தீர்வு காணப்படும்.மூத்த குடிமக்கள் பாதுகாப்பில், அதுல்யா நிறுவனத்தின் நிபுணர்களை, ஸ்ரீராமச்சந்திரா நிறுவனம் தங்களுடன் இணைத்து செயல்படும்.இதுகுறித்து, ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தர் உமா சேகர் கூறுகையில், மூத்த குடிமக்கள் நலன் குறித்து, அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், மூத்த குடிமக்கள் குறித்த நடப்பு தகவல்களை பயன்படுத்தி, கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்த முடியும் என்றார்.

