UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், முதுகலை கணினிப் பயன்பாட்டுத் துறை சார்பில்,கிளஸ்டர் 2024 என்ற தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.பல்வேறு கணினி துறைகளை சேர்ந்த மாணவர்கள், தங்கள் அறிவையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில், இக்கருத்தரங்கு நடந்தது. சிறப்பு விருந்தினராக, சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டார். சந்திரயான்- 3 திட்ட அனுபவம், விண்கலத்தை வடிவமைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் அற்புதங்கள் குறித்து பேசினார்.கல்லுாரியின் செயலர் சரஸ்வதி,நிர்வாக செயலர் பிரியா, முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி மற்றும் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

