UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 10:11 AM
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே சக்குடியில் ஒன்றரை நிமிடத்தில் நான்கு வயதான மாணவி 30 யோகாசனங்கள் செய்து சாதனை படைத்தார்.திருப்புவனம் ஜீவ யோகா சூட்சும குருகுலத்தின் சார்பாக யோகாவில் உலக சாதனை படைப்பதற்காக சக்குடி தனியார் பள்ளியில் நேற்று போட்டிகள் நடந்தன. ஜீவ யேகா சூட்சும குருகுலம் மற்றும் சக்குடி கல்யாணி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவைகளைச் சேர்ந்த 67 மாணவ, மாணவிகள் சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்றனர். 30 நிமிடம் மாணவ, மாணவிகள் படுத்த நிலையிலான ஆசனத்தை செய்து காட்டியதை நோபல் வேர்ல்டு ரிக்கார்ட் அமைப்பு பதிவு செய்தது.தனி நபர் பிரிவில் குருகுலத்தைச் சேர்ந்த நான்கு வயது மாணவி தமிழினி ஒன்றரை நிமிடத்தில் 30 ஆசனங்களும், எட்டு வயதான தியாஸ்ரீ இரண்டரை நிமிடத்தில் 50 ஆசனங்களும், 10 வயதான லக்ஷன்யா இரண்டே கால் நிமிடத்தில் 50 வெவ்வேறு ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர்.சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு நோபல் வேர்ல்டு ரிக்கார்ட் அமைப்பு சான்று, பரிசு வழங்கப்பட்டது. கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் பங்கேற்றார்.

