sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உலகளாவிய உற்பத்தி திறனுக்கு இந்தியா முக்கியமானது: மகேந்திரநாத் பாண்டே

/

உலகளாவிய உற்பத்தி திறனுக்கு இந்தியா முக்கியமானது: மகேந்திரநாத் பாண்டே

உலகளாவிய உற்பத்தி திறனுக்கு இந்தியா முக்கியமானது: மகேந்திரநாத் பாண்டே

உலகளாவிய உற்பத்தி திறனுக்கு இந்தியா முக்கியமானது: மகேந்திரநாத் பாண்டே


UPDATED : மார் 08, 2024 12:00 AM

ADDED : மார் 08, 2024 04:06 PM

Google News

UPDATED : மார் 08, 2024 12:00 AM ADDED : மார் 08, 2024 04:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:
தஞ்சாவூர், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே பேசியதாவது:
இந்திய மக்கள் தொகையான, 140 கோடியில், இளைஞர்களின் எண்ணிக்கை, 63 சதவீதமாக உள்ளது. இளைஞர்கள் தான் நம் நாட்டில் நீண்ட நாட்களாக வாழ கூடியவர்கள். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களை நம்பியே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மேலும், வளர்ந்த பாரதம் விரிவான திட்டம் - 2047, இளைஞர்களை நம்பி தான் உள்ளது.இந்தியாவின் உலகளாவிய உற்பத்தித் திறனுக்கு இந்திய மூலதன பொருள்கள் துறை முக்கியமானதாக உள்ளது. கல்வி நிறுவனங்களும் தொழிலகங்களும் இணைந்து செயல்படுவதற்காக மத்திய கனரக தொழில்கள் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும், இறக்குமதியைக் குறைத்து, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுவதற்காக, 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிக்கு மாற்றாக, மூலதன பொருட்கள் துறையில் ஏராளமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சாஸ்த்ராவில் மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 80 சதவீதம், தொழிலகப் பங்குதாரரிடமிருந்து 20 சதவீதம் பங்களிப்புடன், 40 கோடி ரூபாய் மதிப்பில், தொழில்நுட்ப மேம்பாட்டு ஊக்கப்படுத்தும் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த மையம், தொழிலக இணையம், ரோபோடிக்ஸ், 3டி, 4டி பிரின்டிங்ஸ், ட்ரோன்ஸ், மின்னணு உற்பத்தி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, மத்திய அரசு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, ரிவர்ஸ் ப்ராபல்ஷன் வீல் சேர், இளநீர் பதப்படுத்தும் மையத்தையும் அமைச்சர் துவங்கி வைத்தார். விழாவில், மத்திய கனரக தொழில்கள் துறை இணைச் செயலர் விஜய் மிட்டல், பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைத்தியசுப்பிரமணியம், திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை முதன்மையர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us