sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதை மாத்திரையுடன் கல்லூரி மாணவர் கைது

போதை மாத்திரையுடன் கல்லூரி மாணவர் கைது

போதை மாத்திரையுடன் கல்லூரி மாணவர் கைது


UPDATED : மார் 08, 2024 12:00 AM

ADDED : மார் 08, 2024 04:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 08, 2024 12:00 AM ADDED : மார் 08, 2024 04:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி:
பவானி அருகே, போதை மாத்திரையை விற்பனைக்கு கொண்டு சென்ற, நான்கு கல்லுாரி மாணவர்களை போலீசில் சிக்கினர்.அம்மாபேட்டை எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் பிரிவில் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஹீரோ ஸ்பிளெண்டர், யமாஹா ஆர்-௧௫ பைக்கில் வந்த வாலிபர்கள், போலீசை கண்டதும் திருப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த ஒட்டமெத்தை நாகராஜ் மகன் ஸ்ரீதர், 21; எஸ்.பி.பி., காலனி செல்வம் மகன் பழனிசாமி, 20; ஈரோடு, கருங்கல்பாளைம் பாலு மகன் தமிழரசன், 24, சுப்ரமணி மகன் நவீன், 20, என்பது தெரிந்தது.திருச்செங்கோடு தனியார் கல்லூரி அருகே போதை மாத்திரைகளை அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வாங்கி வந்து, அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர் பிரிவு அருகே வரும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரிந்தது.நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, பத்து போதை மாத்திரை, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நான்கு பேரும் வெவ்வேறு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருவதாக, அம்மாபேட்டை போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us