டென்மார்க் தொழில் நுட்பத்தில் நவீன தானியங்கி பால் பண்ணை
டென்மார்க் தொழில் நுட்பத்தில் நவீன தானியங்கி பால் பண்ணை
UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 04:10 PM
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி புதிய கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், கல்லுாரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எம்.பி., ராஜேஸ்குமார், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு, 1.50 லட்சம் லிட்டர் முதல், இரண்டு லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதல் செய்யப்பட்டு, சேலம் பால் பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தனி பால் பண்ணை அமைக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும். அதனால், நாமக்கல் மாவட்டத்திற்கு என, நவீன பால் பண்ணை நிலையம், தனி செயல்பாட்டு அலகு, &'டென்மார்க்&' தொழில் நுட்பத்துடன், 90 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், அட்மா திட்ட தலைவர் நவலடி, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

