தமிழக அரசுக்கு எதிராக பதிவிட்டதாக நெல்லிக்குப்பம் ஆசிரியை சஸ்பெண்ட்
தமிழக அரசுக்கு எதிராக பதிவிட்டதாக நெல்லிக்குப்பம் ஆசிரியை சஸ்பெண்ட்
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 09:24 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில், அரசு மேல்நிலை பள்ளியில், உமாமகேஸ்வரி என்பவர், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அவரது, சமூக வலைதளப்பதிவு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலுபவர்கள் யார்; இந்த சமூகத்தில் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் தானே. அவர்கள் வாழ்வு மலர்ந்தால் தானே செழிப்பான சமூகம் உருவாகும்.அரசியல் தலைவர்களுடன், தமிழக ஆளுமைகள், திரைக்கலைஞர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எல்லாம் படங்கள் எடுக்கும் போதும், அவர்களை சந்திக்கும் போதும், சமூகத்தின் ஆணிவேரில், அதாவது கல்வியில் சீழ் பிடித்து இருக்கிறது. உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று ஒரு நிமிடம் பேசுங்கள்.நாம் எல்லாரும் சேர்ந்து தான், தமிழக கல்வி என்ற அந்த அழகிய மரத்தைக் காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்.இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக உமாமகேஸ்வரியை, சஸ்பெண்ட் செய்து, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

